இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ? அமைச்சர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள்,.அதிமுக கடும் விமர்சனம்.! 

இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ? அமைச்சர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள்,.அதிமுக கடும் விமர்சனம்.! 

தமிழகத்தில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. திமுக ஆட்சியமைத்த நேரம் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஆட்சியமைத்ததும் தமிழகத்தில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. 

இந்நிலையில் திமுக ஆட்சியையும், அது அறிவித்த ஊரடங்கையும் விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' விமர்சித்துள்ளது. 'விக்கித்து நிக்க விழிபிதுங்கி தவிக்க' என்ற தலைப்பில் 'நமது அம்மா' இதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில் "சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்கிற திமுக ஆட்சியின் தொடர் அறிவிப்பு நாட்டு மக்களையே நகைக்க வைக்கிறது. கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகளின் மொத்த விற்பனைக் கூடங்கள் இயங்கலாம். ஆனால் ஏழை எளிய மக்கள் வாங்கக்கூடிய இறைச்சி மீன் கடைகள் அனுமதி கிடையாதாம்

டூவீலர் மெக்கானிக் கடைகளை திறக்கலாம். ஆனால் வாகனங்களை ஓட்டத் தடை. இப்படியாக தளர்வுகள் என்ற பெயரில் குழப்பங்களையும், கிறுக்குத் தனமான முடிவுகளையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்யும் நிலையில், இவர்கள் மின்சாரத்தையே ரத்து செய்துவிடுகிறார்கள்.

வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு ஊரடங்குகளை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை முதலமைச்சருக்கு முன்பாகவே விக்கிரம ராஜா அறிவிக்கிறார். யாருக்கு என்ன துறை என்று தெரியாத அளவில் அமைச்சர்கள் எல்லாம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். இன்னும் என்னென்ன கொடுமைகள் எல்லாம் வரிசை கட்டி காத்திருக்கின்றனவோ” என்று  திமுக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறது அதிமுக.