சசிகலா அதிமுகவுக்கு நன்மை செய்ய நினைத்தால் இதை செய்யட்டும்.! அதிமுக முன்னாள் எல்.எல்.ஏ அறிவுரை .!

சசிகலா அதிமுகவுக்கு நன்மை செய்ய நினைத்தால் இதை செய்யட்டும்.! அதிமுக முன்னாள் எல்.எல்.ஏ அறிவுரை .!

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார் பில் நடைபெற்ற நிர்வாகி கூட்டத்தில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் ஒருபொழுதும் தென்காசி தெற்கு மாவட்டம் ஏற்றுக்கொள்ளாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அதிமுகவின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் ஒருபொழுதும் தென்காசி தெற்கு மாவட்டம் ஏற்றுக்கொள்ளாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட கழகச் செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் "அதிமுவில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சசிகலாவை எப்பொழுதும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும் குறிப்பாக சசிகலாவையும் அவரது குடும்பத்தாரையும் ஒருபொழுதும் தென்காசி தெற்கு மாவட்டம் ஏற்றுக் கொள்ளாது எனவும் சசிகலா அதிமுகவிற்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால் அவர் ஒதுங்கி இருப்பதே பெரிய நன்மை" எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை கே.ஆர். பி. பிரபாகரன் கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன்  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.