முன்னாள் அமைச்சருடனான நெருக்கம்... ஆதாரத்தை வெளியிட்ட நடிகை சாந்தினி!!

முன்னாள் அமைச்சருடனான நெருக்கம்... ஆதாரத்தை வெளியிட்ட நடிகை சாந்தினி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் தனியே குடும்பம் நடத்தி வந்த நடிகை சாந்தினி,  தற்போது அவர் மீது பரபரப்பு புகார் அளித்த நிலையில், ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்,  முன்னாள் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அப்போது அவருக்கு எதிராக செயல்பட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் மீது ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது . இதன் காரணமாக அவர்களது பதவி பறிக்கப்பட்டது.  இதில் ஒருவர் தான் முன்னாள்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்.

இவருக்கும், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ‘நாடோடிகள்’ படத்தில் நடித்தவருமான துணை நடிகை சாந்தினி என்பவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நெருங்கிய தொடர்பாக மாறியுள்ளது. அதன்பின்னர் 2017ம் ஆண்டு முதல் அவர்கள் பெசண்ட் நகர் பகுதியில் வீடு எடுத்து தனியே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது சாந்தினிக்காக  மனைவியை விவாகரத்து செய்யவும் தயாராக இருப்பதாகவும், சட்டப்படி திருமணம் செய்துகொள்வேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு சாந்தினி வெளியே சென்றுவர அமைச்சரின் வாகனம், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், ராமேஷ்வரம், புதுச்சேரி என சுற்றுலா, 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அமைச்சரின் உரையை மனைவி என்ற முறையில் நேரில் பார்வையிட அனுமதி என அடுத்தடுத்த கட்டங்களுக்கு இவர்களது உறவு கடந்து சென்றுள்ளது. 

இந்த விவகாரம் மாஜி அமைச்சரின் குடும்பத்தினருக்கும் தெரியவர அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஒரு கட்டத்தில் சாந்தினி அமைச்சர் மணிகண்டனை சட்டப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டன் காலம் கடத்தி வந்துள்ளார். இதையடுத்து சாந்தினிக்கு அவர் சந்தேகம் ஏற்படத் துவங்கியுள்ளது. இதனால் மாஜி அமைச்சரோடு தான் இருந்த தருணங்களை ஆதாரங்களாக சாந்தினி சேர்த்து வைக்க தொடங்கியுள்ளார்.

இதனிடையே மூன்று முறை சாந்தினி கருவுற்று கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பும் செய்ததாக கூறப்படுகிறது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரின் வீட்டிற்குச் சென்று தன்னை திருமணம் செய்யக்கூறி  தீக்குளிக்க முயற்சியும் செய்துள்ளார் சாந்தினி. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

அந்த நேரத்தில் கொரோனா தொற்று ஏற்படவே ஊரடங்கு காரணமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கும், சாந்தினி மலேசியாவிற்கும் சென்றுவிட்டனர். மீண்டும் 2021 ஆம் ஆண்டு இருவரும் நேரில் சந்தித்தபோது, திருமணம் செய்துகொள்வதாக மணிகண்டன் கொடுத்த வாக்குறுதியை நம்பி இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சாந்தினியை இருவரும் ஒன்றாக இருந்தபோது, எடுத்த நெருக்கமான படங்களை காட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார்.

தன்னிடம் சாந்தினியின் அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதைக்கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்ட அதிர்ச்சியடைந்துள்ளார் சாந்தினி. அதன் பின்னர் சாந்தினியை முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு அறிமுகப்படுத்திய பரணி மூலம் சாந்தினிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில்தான் சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆதாரங்களோடு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது மாஜி அமைச்சரால் பலமுறை கர்ப்பமடைந்ததாகவும், அவரது வேண்டுகோளுக்கு இணக்க பல முறை கருக்கலைத்ததாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள அவரிடம் போராடியும் அவர் மறுத்து வந்ததாகவும், அவர் மீது புகார் அளிக்க முயன்ற ஒவ்வொரு முறையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே அவர் மீது இதுவரை புகாரளிக்கவில்லை, ஆனால் இப்போது மிரட்ட ஆரம்பித்ததால் போலீசில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

எனவே அவரிடம் இருந்து எனது ஆபாச போட்டோக்களை நீக்குவதோடு, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.