
பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கபடி வீரர்
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அருகே உள்ள புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ்.கபடி வீரரான இவர் சில நாட்களுக்கு முன்பு கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் அவரது குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
குடும்பத்தினருக்கு நிதியுதவி
இந்நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து கபடி வீரர் விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், தற்போது நான் நடித்து வெளிவரவுள்ள திரைப்படத்தில் வரும் காட்சியை போன்றே விமல்ராஜ் உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் நாடே ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இழந்துள்ளதாகவும்,மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்திக்கும் போது இது தொடர்பாக பேசுவேன் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது யுவர் பேக்கர்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்..