திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!

திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!

பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டி தனக்கு ஆச்சரியப்பட்டியாக தெரிகிறது. திமுக என்பது அரசியல் கட்சி மட்டுமல்ல, இது கொள்கைகளின் கோட்டை என்றார். 

கருணாநிதி கூறிய 5 முழக்கங்கள் மற்றும் நான் கூறிய 5 முழக்கங்கள் தான் திமுகவின் கொள்கைகள். இந்த நாட்டில் திமுகவை போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வி அடைந்த கட்சியும் இல்லை இரண்டுமே நமக்குதான் பெருமை.  

நாம் அடையாத புகழும் இல்லை, நாம் படாத அவமானங்களும் இல்லை, நாம் செய்யாத சாதனைகளும் இல்லை, அடையாத வேதனைகளும் இல்லை என கூறினார்.

இந்நிகழ்வில் மாற்றுக் கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார்.