அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி 54 லட்சம் மோசடி…ஆசிரியர் கைது!

ஆசிரியர் வியாகப்பன், அவரது தம்பி ஜெயபால் மற்றும் பந்தல்குடியை சேர்ந்த ஜான் தேவபிரியம் ஆகியயோர் சேர்ந்து பல்வேறு அரசு துறை பணிகளுக்கான உத்தரவுகளை போலியாக தயார் செய்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி 54 லட்சம் மோசடி…ஆசிரியர் கைது!

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், மடத்தூர், கல்லூரணி , சுரண்டை , ஆலங்குளம், ராஜபாண்டி உள்பட பல ஊர்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசு தேர்வாணயத்தின் குருப் 4 பிரிவு தேர்வு எழுதி வேலைக்காக காத்திருந்தனர்.

அரசு வேலை

இதில் ஒருவரான கீழப்பாவூர் ஊரை சேர்ந்த பொன்ராஜ்
நண்பவர் ஒருவர் மூலம் அறிமுகமான ஆவுடையானூர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் வியாகப்பன் (வயது 51) என்பவர் தன்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் கூறியுள்ளார்.

மேலும் அரசு வேலை வாங்கி தர நபர் ஒருவருக்கு
15 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொன்ராஜ் மற்றும் அவருடன் குரூப் 4 எழுதிய 20 பேரும் தலா 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மொத்தம் 1 கோடியே 54 லட்சம் கொடுத்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஆசிரியர் வியாகப்பன், அவரது தம்பி ஜெயபால் மற்றும் பந்தல்குடியை சேர்ந்த ஜான் தேவபிரியம் ஆகியயோர் சேர்ந்து பல்வேறு அரசு துறை பணிகளுக்கான உத்தரவுகளை போலியாக தயார் செய்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பணி நியமன ஆணைகள் போலியானது என தெரியவந்தது.

பணத்தையும் கொடுத்து வேலை கிடைக்காமல் ஏமாந்த இவர்கள் பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் ஆசிரியர் வியாகப்பனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாவூர்சத்திரம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.