வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழப்பு....

கர்நாடகா மாநிலம் கிருஷ்ணா நதியில் எற்ப்பட்ட வெள்ளபெருக்கில், தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்ற வாலிபர் நீரில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டவரை காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழப்பு....

கர்நாடக மாநிலத்தில் தொடர்மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளநீர் ஆர்பரித்து செல்கிறது. இதற்கிடையில் பெல்காம் மாவட்டம் மஞ்சாரி என்றும் கிராமத்தின் அருகே கிருஷ்ணா நதியில் ஓம்கார் சதாசிவா என்கிற இளைஞர் ஆற்றில் தவறி விழுந்துவிட, அவரை காப்பாற்ற ஷெரிப் என்கிற இளைஞரும் அவருடன் இருவரும் என மூன்று பேர் நீரில் குதித்து ஓம்கார்சதாசிவத்தை காப்பாற்ற முயன்றனர்.

அப்போது நீரில் விழுந்தவர் கடும் போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் அவரை காப்பாற்ற சென்ற மூவரில் ஒருவரான ஷெரிப் என்கிற வாலிபர் நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் சம்பவ இடத்திற்க் வந்த தேசிய பேரிடர் மிட்புக்குழுவினர் நீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை சடலமாக மீட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.