இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை.!!

அரியலூரில் இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை.!!

அரியலூர் மாவட்டம் கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்.  இவர், அதேபகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

ஆனால், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பாண்டியன் மறுத்ததால், கடந்த 2018 ஜூன் மாதம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் பாண்டியனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் பாண்டியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், இளம்பெண்ணை ஏமாற்றியதற்க்காக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.