எந்த தேர்தலில் எது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்யமுடியாது - ஆர்.எஸ்.பாரதி

எந்த தேர்தலில் எது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்யமுடியாது - ஆர்.எஸ்.பாரதி

கடந்த 8 மாத காலத்தில் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் எழுந்தது போல, திமுக அமைச்சர்கள் மீது புகார் கொடுக்க எந்த முன்னாள் அமைச்சருக்காவது திராணி இருக்கிறதா?  என ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் புகாரை அடுத்து அதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,  இந்த 8 மாத காலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் எழுந்ததாகவும், அதே 8 மாத காலத்தில் திமுக ஊழல் செய்துள்ளதென்று குறிப்பிட்டு காட்ட எந்த முன்னாள் அமைச்சருக்காவது திராணி இருக்கிறதா? எனவும் குறிப்பிட்டார்.

எந்த தேர்தலில் எது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்யமுடியாது எனவும் ஆர். எஸ்.பாரதி தெரிவித்தார்.