
கெட்டுப்போன உணவுகள் வழங்கப்படுவதாக யா முகைதீன் உணவகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கெட்டுப்போன கோழிக்கறி, மீன், இறால், பிரியாணி மற்றும் 50 கிலோ இறைச்சியை கண்டறிந்து பறிமுதல் செய்ததை அடுத்து கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.
15 நாட்களுக்குள் பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும் எனவும், தரமான உணவு வழங்குவோம் என எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து 2ம் முறையாக தவறு செய்யும் பட்சத்தில், உணவகம் நிரந்தரமாக மூடப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.