தமிழகம் முழுவதும் 39 மையங்களில் இன்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

தமிழகம் முழுவதும் 39 மையங்களில் இன்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 39 மையங்களில் இன்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!
Published on
Updated on
1 min read

தமிழக காவல்துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கு 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள்,  பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெற்றுள்ளார்கள்.

இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெறவுள்ளது. காவல்துறையில் வேலைசெய்பவர்களுக்கு 20 சதவீதம் இட ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நாளை  எழுத்து தேர்வும், தமிழுக்கான தகுதி தேர்வும் தனியாக  நடைபெறுகிறது. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெறவுள்ள 197 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com