அட., நம்ம ஊருல வரப்போகுது உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம்...

சென்னையில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக  விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அட., நம்ம ஊருல வரப்போகுது  உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம்...

2021 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 5 வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் 5  பேருக்கும் தமிழக அரசின் சார்பில 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் நடைபெற்ற நிகழச்சியில்  விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளின்   
குடும்பத்தினரிடம் தலா 5  லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

விழா மேடையில்  பேசிய அமைச்சர் மெய்ய நாதன் தமிழக வீரர்கள் நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று நாடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை  தெரிவித்தார்.மேலும் சென்னையில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு நகரம்  அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு மற்றும் எழும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..