பெயின்ட் அடிக்கும் போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு... பல்லடம் போலீசார் விசாரணை...

பல்லடம் அருகே சுற்று சுவர் மீது ஏறி பெயிண்ட் அடித்து கொண்டிருந்த கூலி தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெயின்ட் அடிக்கும் போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு... பல்லடம் போலீசார் விசாரணை...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலத்தில் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி பெயிண்ட் அடித்து கொண்டிந்திருந்த திருச்சியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தவறி கீழே விழுந்து படுகாயம் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் 36 இவர் தனது மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து லலிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமண செய்யததாக கூறப்படுகிறது. இரண்டாவது மனைவியை ஊரிலேயே விட்டு விட்டு சங்கர் மட்டும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலத்தில் தங்கி பெயிண்டிங் காண்ட்ராக்டர் ப்ரேம் என்பவரிடம் கூலி வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று மாலை மங்கலம் நால் ரோடு அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் அதன் சுற்று சுவர் மீது ஏறி  நின்றவாரு சக தொழிலாளி சிலருடன் அந்த கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக பெயிண்டிங் தொழிலாளி சங்கர் கால் தவறி 4 அடி உயரம் உள்ள காம்பவுண்ட் சுவரிலிருந்து  தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் காரில் சங்கரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சங்கரின் உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே மங்கலத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காம்பவுண்ட் சுவரிலிருந்து தவறி விழுந்தது திருச்சியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.