மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது...

கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது...

கூட்டுறவு சங்கங்களின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனவும், இதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாகவும்,  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டில் முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.