”6 மாதத்திற்குள் இல்லம் தோறும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

”6 மாதத்திற்குள் இல்லம் தோறும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்”  - அமைச்சர் மனோ தங்கராஜ்
Published on
Updated on
2 min read

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா நாட்டு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் உரையாற்றினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது கட்டமைப்புகள் வசதிகள் இருக்கிறது என்பது குறித்து வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை என்றும், அது குறித்து போதிய விளம்பரமும் இல்லை எனவும் கூறினார். 

மேலும், நம் நாட்டில் திறமை வாய்ந்தவர்களுக்கும் வெளிநாடுகளில் எந்த மாதிரியான சூழ்நிலை இருப்பது என்பது தெரிய வாய்ப்பில்லை, அதற்காக தான் யுமாஜின் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்பட்டு அது  வெற்றிகரமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இது மாதிரியான மாநாடுகளை நடத்தி வாய்ப்புகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பை துறை மூலமாக 10 லட்சம் புத்தகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகவும், கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதை தடுக்க முதலமைச்சர் ஐந்து குழுக்களை அமைத்துள்ளார் என்றும்,  மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது அரசு தொடர்ந்து தீவிரமாக இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் புதிதாக கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார். மற்றும், இல்லம் தோறும் இணைய வசதி வழங்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் 5, 6 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும்,  அதன் பிறகு இணைய வசதி பிரச்சனை இருக்காது என்றும் கூறினார்.

அதோடு, தமிழ்நாட்டில் இலவசம் கொடுத்தால் பிரதமர் விமர்சிக்கிறார் தற்பொழுது கர்நாடக தேர்தலில் இலவசங்களை அறிவித்திருக்கிறார்கள் இது அவரின்(பிரதமர்) இரட்டை வேடத்தை காட்டுகிறது எனவும் விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com