தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த நிலையில் ... வெறிச்சோடியக் காணப்படும் கோயம்பேடு !

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் அனைத்தும் இன்று காலை முதலே இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில். மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லரை வியாபாரிகள் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த நிலையில்  ... வெறிச்சோடியக் காணப்படும் கோயம்பேடு !

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு மாதங்களாக நோய்த்தொற்றை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது..மேலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த மே 24 முதல் ஜூன் 7 வரை இரு வார காலங்களுக்கு எவ்வித தளர்வுகள் இன்றி முழு ஊரங்கை அமல்படுத்தியது..

மேலும் ஊரடங்கு காரணத்தினால் கடைகள் அனைத்தும் அடைகப்பபட்டதை அடுத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை நடமாடும் வண்டிகள் மூலம் மக்களுக்கு கிடைக்குமாறு மாநகராட்சி அறிவித்தது..

இந்நிலையில் நோயின் தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஜூன் 7 முதல் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன்‌ மேலும்‌ ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் நாளை முதல் அத்தியாவசிய வரை கடைகளான காய்கறி மளிகை கடைகள்  அனைத்தும் திறக்கப்படுவதை ஒட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் அனைத்தும் இன்று காலை முதலே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை அளித்து கடைகள் அனைத்தும் மூடப்படும் ஆனால் ஊரடங்கு காரணமாக இரு வாரங்களாக கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் பொதுவாக மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லரை வியாபாரிகள் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றும் மேலும் நாளை முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்படுவது ஒட்டி கடைககளுக்கு பொருட்கள் வாங்க வியாபாரிகள் கூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..