
அனைவரும் ஒரே குடும்பமாக பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஞானம், இரக்கம், நம்பிக்கையுடன் நம் இதயங்களை தீபாவளித் திருநாள் ஒளிரச் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அனைவரும் ஒரே குடும்பமாக பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி நாளில் மனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், அவர்தம் வாழ்விலும் தீப ஒளி ஏற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இந்நன்நாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைத்து வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, பொருளாதாரச் சீரழிவால் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசூரனுக்கு இந்நாள் முடிவு கட்டட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது அறிக்கையில், தீபாவளித் திருநாளில் ஏற்றப்படும் ஒளி, மக்கள் வாழ்வில் வெளிச்சத்தைப் பரப்பி நன்மையை மேலோங்கச் செய்யட்டும் என தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து, பல அரசியல் தலைவர்களும், தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.