உங்களை எதிர்த்தா கைது பண்ணுவீங்களா? உடனே மாரிதாஸை ரிலீஸ் பண்ணுங்க - வானதி சீனிவாசன் அறிக்கை....!!

யூடியூபர் மாரிதாஸ் கைதுக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உங்களை எதிர்த்தா கைது பண்ணுவீங்களா? உடனே மாரிதாஸை ரிலீஸ் பண்ணுங்க - வானதி சீனிவாசன் அறிக்கை....!!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாட்டிற்கு ஏற்பட்ட இந்த பெரும் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது பல்வேறு மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். ஆனால், தமிழகம், காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் மாரிதாஸ் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். 

மேலும் மாரிதாஸை அவசரமாக கைது செய்த காவல்துறையினர், முப்படை தலைமைத் தளபதி மரணத்தை கொண்டாடி அவர்களையும் நமது ராணுவத்தையும் அவமதிக்கும் வகையில் பதிபவர்களை கைது செய்யவில்லை எனவும்  அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இப்போது, மட்டும் அல்ல, பிரிவினைவாதம் பேசுவோர் மீது எப்போதுமே திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டியுள்ளார்.

பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. திமுகவின் கொள்கையும் திமுக அரசின் செயல்பாடுகளையும் மிக கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ்.

இந்தப் பின்னணியில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாகப் பேசும் கட்சி திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என்று விமர்சித்துயுள்ளார். 

திமுக வை எதிர்க்கும் குரலை ஒடுக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான, கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிடவேண்டும் என்றும் மாரிதாஸ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.