உங்க கட்சினா விக்ரமனுக்கு வாக்களிக்க சொல்லுவீங்களா? திருமாவளவனுக்கு வனிதா எதிர்ப்பு!!!!

உங்க கட்சினா விக்ரமனுக்கு வாக்களிக்க சொல்லுவீங்களா? திருமாவளவனுக்கு வனிதா எதிர்ப்பு!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர் விக்ரமனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுருந்தார். இதற்கு பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும், நடிகையுமான வனிதா விஜயகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுத் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சாமானியர்கள் பங்கேற்கும் பொழுதுப்போக்கு நிகழ்ச்சியில் அரசியல் தலையீடுகள் இருப்பது நேர்மையற்றது. அரசியல் கட்சித் தலைவர் தனது நிர்வாகிக்கு ஓட்டு போடுங்கள் என கேட்பது, பார்வையாளர்களிடம் இருந்து வாக்கை விட பெரும்பான்மை வாக்கு நிகழ்ச்சியை பார்க்காத நபர்களிடம் இருந்து வரும். இது அந்த நிகழ்ச்சியின் தன்மையை பாதிக்கும்.


நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் நிர்வாகியான கவிஞர் சினேகனுக்கு வாக்களியுங்கள் என கேட்கவில்லையே. ஒருவேளை போட்டியாளர் விக்ரமன் வெற்றிப் பெற்றால் அது அரசியல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் உதவியால் வென்றதாக கருதப்படுமே தவிர பிக்பாஸ் பார்வையாளர்கள் அளித்த வாக்குகளால் அவர் வெற்றி பெற்றார் என கருத முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 

புதுக்கோட்டை வேங்கைவயல் ”மனித குலத்திற்கே அவமானம்” - தொல்.திருமாவளவன்