தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? நாளை மறுநாள் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? நாளை மறுநாள் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு

மத்திய அரசு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மாநில பாட திட்டத்தின் கீழ் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள் என அனைவரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 

அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக்களை tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கருத்துக்களை பகிரலாம் எனவும், 14417 என்ற எண் மூலமாக  கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. இதில .பெரும்பாலோனோர்  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு  வேண்டாம் என கருத்து  தெரிவித்து  வருவதாக கூறப்படுகிறது.

இதனால்  மாணவர்கள்  பெற்றோர்கள்  மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களின் அடிப்படையில்  12ம் வகுப்பு பொதுத்தேர்வை  நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா  ? என்பது குறித்த நாளை ஆலோசனை நடத்தப்பட்டு  இறுதி முடிவு  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.