தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் முடங்கியிருந்த உலக நாடுகள் மெல்ல, மெல்ல அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் நிலையில், உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் என்ற கொரோனாவின், புதிய வகை வைரஸ் பரவி பீதியை கிளப்பி வருகிறது.  மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன பல நாடுகள். தமிழகத்தில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரப்படும் நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரும் கவசம் அணிந்து கொள்வது, மற்றும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படாது. தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மதுரை மாவட்டம் மோசமான நிலையில் இருக்கிறது. முதல் டோஸ் தடுப்பூசியை 71 சதவீதம் பேர் எடுத்துக்கொண்டனர். இரண்டாவது டோஸ் 32 சதவீதம் மட்டுமே எடுத்துள்ளனர்.  

மதுரை நிலவரம் மோசம் மதுரை மக்கள் தயவு செய்து தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை . சந்தேகத்தின் பேரில் 477 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் புதிய வகை வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது. தடுப்பூசி இந்த வகை வைரஸ் பரவல் வேகமாக இருப்பதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதை தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்துவதும், முக கவசம் அணிவதும்தான் முக்கிய பங்காற்றும். குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியானால் அவர்களை தனியாக தங்க வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.