விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா.? வேளாண்துறை அமைச்சர் பதில்.!  

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா.? வேளாண்துறை அமைச்சர் பதில்.!  

வேளாண் தனி பட்ஜெட் சிறப்பாக அமைந்திட முதற்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறினார். 

சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண் துறை தலைமை அலுவலகத்தில் மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய வேளாண் துறை இணை இயக்குனர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம், துறைச் செயலர் சமயமூர்த்தி மற்றும் வேளாண்மைத் துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்

ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் "தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்ததை அடுத்து அவரது எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு முதல் ஆலோசனை கூட்டம் இன்று ஆரோக்கியமான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. தற்போதைக்கு வேளாண் உற்பத்தி 115 லட்சம் ஆக்டர் ஆக உள்ளது அதனை நூத்தி இருபத்தி ஐந்து லட்சம் ஹெக்டேராக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" எனக் கூறினார். 

மேலும் "விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்ற அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர். அவர்களுடைய இது குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் உடன் இந்த பட்ஜெட் அமையும்" எனவும் உறுதியளித்தார்.