மேலும் 5 நாட்களுக்கு கனமழை ...  14 மாவட்டங்களில் இன்று கனமழை... 

சேலம், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 5 நாட்களுக்கு கனமழை ...  14 மாவட்டங்களில் இன்று கனமழை... 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்று சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், இன்றும் நாளையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவித்துள்ளது.