தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  சேலத்தில் சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

இதே போல் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.   

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சிய டைந்தனர். 

இதனிடையே தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.