சென்னையில் பரவலாக மழை - தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னையில் பரவலாக மழை - தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி, சாலிகிராமம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

இதனிடையே, மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.