ஆளுநர் பேசக்கூடாது என்றால் ஏன் மசோதாவை அனுப்பனும் ? கேள்விகள் எழுப்பிய குஷ்பு

ஆளுநர் பேசக்கூடாது என்றால் ஏன் மசோதாவை அனுப்பனும் ? கேள்விகள் எழுப்பிய குஷ்பு

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..
அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மேலும் படிக்க | மணீஷ் சிசோடியாவை 10 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறை மனு: வழக்கை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான குஷ்பு


ஆன்லைன் விளையாட்டு தடை விதிப்பு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திரும்ப அனுப்பி உள்ளார். ஆன்லைன் விளையாட்டால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் பல தாய்மார்களுகும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,ஆன்லைன் விளையாட்டில்  பலகோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகப் அரசிற்கு கூறுகிறேன் தமிழக ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். அது என்ன என்று தமிழக அரசு பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவில் கோயில்கள் தாக்கப்படுவதால்...நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் உறுதி - பிரதமர் பேட்டி!

ஆளுநர் பேசவே கூடாது என்றால் ஏன்  அவருக்கு மசோதாவை அனுப்ப வேண்டும். ஆளுநருக்கு ஒரு பதவி உள்ளது அவர் மசோதாவை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் அவருக்கு அனுப்புகிறார்கள்.பெண் தலைவராக ஒவ்வொரு பெண்ணிற்கும் தைரியம், தன்னம்பிக்கை தேவை. ஒவ்வொரு பெண்ணிடம் அது உள்ளது அதனை வெளிக்கொண்டு வரவேண்டும்