தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது....பொன்னார் ஆவேசம்....!

வள்ளுவர் பிறந்தநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது....பொன்னார் ஆவேசம்....!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார் என்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணி தொடரும் என நம்புவதாக தெரிவித்தார்.

மத்திய அரசு எந்த வகையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறது என்பதை முதல்வர் விளக்கமாக சொன்னால் நல்லது என கூறிய அவர், ஏற்கனவே தமிழகத்தின் துணை முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்த ஸ்டாலினுக்கு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அப்போதைய மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெரியாதா? அவர்கள் ஆட்சியில் இருந்த போது முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் என்ன நல்லது செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.  

மேலும் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தராமல் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. என்றும் வள்ளுவர் பிறந்தநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என ஆவேசமாக கூறினார். 

தமிழகத்தில் நீடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரம் வேதனை அளிக்கிறது என்றும் தமிழகம் போதை மாநிலமாக மாறி கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தலைநகரில் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார்.