மாற்றுத் திறளாளிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி விசில் அடித்து நூதன போராட்டம்!!

ராமநாதபுரத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் சங்கத்தினர் விசில் ஊதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாற்றுத் திறளாளிகள் பல்வேறு  கோரிக்கையை வலியுறுத்தி விசில் அடித்து நூதன போராட்டம்!!

ராமநாதபுரம் மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தின் சார்பில் அரசு துறையில் 1 சதவீதம் வேலைவாய்ப்பு, தனியார் துறையில் வேலை வாய்ப்பு, மாத உதவித்தொகையை ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்துவது என உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் காத்திருப்பு போராட்டம் தலைமை  நடைபெற்றது.

இந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட காது கேளாதோர் பலர் வாய் பேச முடியாதவர்கள் என்பதால் தங்களின் கோரிக்கைகளை விசில் அடித்து கூறினர். இந்த போராட்டத்தால்,  மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முழுவம் பரபரப்பாக காணப்பட்டது.

ஈரோடு மாவட்ட காதுகேளாதோர் பொது நல முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விசில் ஊதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.