கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு எங்கே?

தமிழகத்தில் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பில் வன்னியர் பிரிவுக்கு 10.5 விழுக்காடு பற்றிய அறிவிப்பு இல்லாதது வன்னியர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு,கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காட்டுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு பாமக தலைவர் ஜிகே மணியின் கேள்விக்கு, உரிய நேரத்தில் தரப்படுத் என்று தமிழக அரசு அறிவித்தும், தற்போது பொறியியல் படிப்பில் அறிவிப்பு இல்லாத்து அதிர்ச்சியளக்கிறது என்றார். மேலும், 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதாக சொல்லிவிட்டு, தற்போது அறிவிக்காத்து ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளுநர் ஒப்புதலுடன் சட்டம் நிறைவேற்றியும் தற்போது 10.5 விழுக்காடு பற்றிய அறிவிப்பில் இட ஒதுக்கீடு ஏன் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

10.5 விழுக்காடு அறிவிப்பை வன்னியர் சமூக மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொறியியல் படிப்பை தொடர்ந்து மருத்துவ படிப்பு வரவுள்ளது, வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளும் வரவுள்ளது. இனி ஒரு நாளும் தாமதிக்காமல் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலு கோரிக்கை வைத்துள்ளார். இட ஒதுக்கீடு தொடர்பான பல சட்டங்களை இதுவரை அமல்படுத்தியுள்ள நிலையில், வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் அமல்படுத்ததாது ஏன் என்று வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.