இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை எப்போது..? அமைச்சர் பொன்முடி தகவல்...

வரும் 18 தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தமிழக முதல்வர் சேர்க்கை ஆணை வழங்கவுள்ளார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை எப்போது..? அமைச்சர் பொன்முடி தகவல்...

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது,

அண்ணா பல்கலை கழகம், உறுப்பு கல்லூரி, அரசு பொறியல் மற்றம் சுயநிதி கல்லூரிகள் என 440 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக பொறியியல் மாணவர்கள்  விண்ணப்பித்த இடங்கள் 1,74,930 440 கல்லூரிகளில் தகுதியன இடங்கள்  1 ,39,033  ஆகவே இன்னும் நமக்கு இடங்கள் உள்ளன என அவர் தெரிவித்தார். இதில் 87291 மாணவர்கள் ,51730 மாணவிகளும் பொறியியல்  படிப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு எத்தனை வாய்ப்பு வேணுமானாலும் கொடுக்கலாம். அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. நாளை முதல் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்று கூறிய அவர்,  இந்த ஆண்டு  5 கட்டமாக  பொறியியல் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தார்.

வரும் 18 தேதி அண்ணா பல்கலை க்கழகத்தில் இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் சேருகின்ற மாணவர்களுக்கு முதல் அமைச்சர் நேரில் வழங்க உள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு 7.5% இடஒதுக்கீடு முலம் 15,660 விண்ணப்பங்கள் பெற்றுள்ளன.

அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் புதிய  21 அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளுக்கான துவக்கப்படும்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகள் இருந்தது. தற்போது 21 கல்லூரிகள் அனுமதி மறுக்கப்பட்டதால். தற்போது 440 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளதாக பொன்முடி தெரிவித்தார்.