9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போழுது? நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு...

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு, மாநிலத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்  எப்போழுது?  நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு...

வார்டு மறுவரையறை பணிகள் காரணமாக, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதேவேளையில், வார்டு மறுவரையறை பணிகள் இன்னும் முடியாததால், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் நாளை மறுதினம் ஆலோசனை 
நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.