கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? முதலமைச்சருடன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை...

ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? முதலமைச்சருடன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை...

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே கடந்த வாரம் +2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உறுதியளித்தார். +2 மாணவர்களுக்கான மதிப்பெண் அறிவிக்கப்படாமல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது என்றார். மதிப்பெண்கள் அறிவிக்கப்படாமல் மாணவர் சேர்க்கை நடத்தினால், கல்லூரிகள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.