தீபாவளி பஸ் டிக்கெட் முன்பதிவு எப்போது?

தீபாவளி பஸ் டிக்கெட் முன்பதிவு எப்போது?

தீபாவளிக்கு முன்தினம் அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தீபாவளி:

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு முந்தைய இரண்டு நாட்கள் வார விடுமுறையாக அமைந்துள்ளதால் பெரும்பாலானோர் அக்டோபர் 21ஆம் தேதி இரவே சொந்த ஊருக்குப் புறப்படத் தொடங்கி விடுவர் என எதிர்பார்க்கபடுகிறது. 

எப்படி செய்வது?:

இதற்கான முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் தீபாவளிக்கு முன்தினம் சொந்த ஊருக்கு செல்பவர்கள் இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். tnstc.in என்ற இணையதளம், செயலி மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:  நீங்கள் சைவமா? வைணவமா? அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ஆ.ராசா!

கூடுதல் பேருந்துகள்:

இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்து விட்ட நிலையில், சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் பிரதான தேர்வாக பேருந்துகள் மட்டுமே உள்ளன எனவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.