தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு எப்போழுது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு எப்போழுது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பள்ளிகள் இயங்கவில்லை. இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 8ம் தேதிக்கு பிறகு முதல்மைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.