மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு என்ன ஆச்சு?

கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு என்ன ஆச்சு?

கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பார்வதி என்ற பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. 25 வயதான இந்த யானை, கோயிலின் கிழக்கு ஆடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக  யானையின் இடது கண்ணில் கோளாறு ஏற்பட்டதால் அந்த கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து யானை சோர்வாக இருந்ததால், மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து, யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை நோய் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து பார்வதி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைத் துறையில் உள்ள சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை வழங்கினர். தொடர்ந்து கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.