என்ன 76 வது சுதந்திர தின விழாவா...?? நகராட்சி ஆணையாளரின் பதிலால் குழப்பமடைந்த மக்கள்...!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில, போடி நகராட்சியில் 76 வது சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து தற்போது 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில், 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு கவுன்சிலர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதால் 75 ஆவது சுதந்திர தின விழாவா அல்லது 76 ஆவது சுதந்திர தின விழாவா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

76 ஆவது சுதந்திர தின விழா என  குறிப்பிடப்பட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டு சென்றபோது, நகராட்சி பொறுப்பு ஆணையாளராக உள்ள  செல்வராணி, 76வது சுதந்திர தின விழா தான் என உறுதிபட கூறியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அரசியல் கட்சியினர், தவறுதலாக மக்களை குழப்பும் வகையில் அழைப்பிதழ் விடுத்த நகராட்சி ஆணையாளரின் பதில் மக்களை குழப்பும் செயல் என கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடத்தை சிறப்பாக மேற்கொண்டு வரும் நிலையில்,  ஒரு நகராட்சியின் ஆணையாளர் பொறுப்பில் இருபவர், 76 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்  என தவறுதலாக குறிப்பிட்டு, அழைப்புகள் விடுத்த நிகழ்வு தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு தெளிவான விளக்கத்தை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.