மாண்டஸ் புயலின் நிலை என்ன...? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது...?

மாண்டஸ் புயலின் நிலை என்ன...? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது...?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ் புயல்’, 8 ஆம் தேதி மாலை தீவிர புயலாக வலுப்பெற்று  மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று(09.12.2022) காலை 08.30 மணி அளவில் புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கி.மீ. கிழக்கு வட கிழக்கே மற்றும் சென்னைக்கு 260 கி.மீ. தென் - தென்கிழக்கே நிலைகொண்டிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - –புதுவை  தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரத்திற்கு  அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து புயலானது, நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கரையை கடந்த இந்த புயலானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : சூறைக்காற்றுடன் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி...