எங்களை அடிமை அரசு என்று சொல்லிவிட்டு இவர்கள் என்ன செய்கிறார்கள்.? திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்.! 

எங்களை அடிமை அரசு என்று சொல்லிவிட்டு இவர்கள் என்ன செய்கிறார்கள்.? திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்.! 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 7 பேர் விடுதலை செய்வோம் என்று கூறி தற்போது மௌனமாக காட்சியளிப்பது ஏன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார். 

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு சார்பில் கலந்தாய்வு கூட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோவிலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதியில் எம்எல்ஏவுமான் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் 

அப்போது பேசிய அவர், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கருத்து சுதந்திரத்திற்கு பாடம் எடுத்தனர் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பாடத்தை மறந்துவிட்டு கருத்து சுதந்திரத்தை நசுக்குகின்றனர். திமுகவினர்  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால், இன்றைக்கு தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்றவைகளுக்கு தேசிய தகுதி மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூற போகிறார்? 

7 பேர் விடுதலை குறித்து திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இது அடிமை அரசு, உரிமை குரல் எழுப்ப முடியாது என்று பேசிவிட்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழுபேர் விடுதலை உறுதி என்று கூறினார்கள் ஆனால் தற்போது பரோலில் விட்டுவிட்டு 7 பேர் விடுதலையில் மௌனத்தை காட்சியாக அளிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார்.