பால்வளத்துறையின் எதிர்கால திட்டங்கள் என்ன? - சட்டப்பேரவையில் கொள்கை விளக்கம்.. முழு விவரம்

2022-23ம் ஆண்டில் பால் விற்பனையை 15 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பால்வளத்துறையின் எதிர்கால திட்டங்கள் என்ன? - சட்டப்பேரவையில் கொள்கை விளக்கம்.. முழு விவரம்

பால்வளத்துறையின் எதிர்கால திட்டங்கள் என்ன? என்பது  பற்றி சட்டப்பேரவையில் கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் பதப்படுத்தப்பட்ட பால் விற்பனையில் ஆண்டுக்கு 10% வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டு விற்பனை செய்யப்படும் பால் அளவினை நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மொத்த பால் கொள்முதலில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் 17.6 சதவீதமாக உள்ள நிலையில், அதை 25 சதவீதமாக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும், ஆவின் நிறுவனத்தின் சந்தை மதிப்பை கூட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சந்தையில் பால் பொருட்கள் விற்பனையில் 10 % வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள பால் பொருட்கள் விற்பனை அளவை 50 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில்,  கறவை மாடுகளில் இருந்து பெறப்படும் பாலின் அளவை நாளொன்றுக்கு தற்போதுள்ள 6.80 லிட்டரிலிருந்து 7. 02 லிட்டராக உயர்த்த நடவடிக்ககை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நுகர்வோரின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ஆவின் பால் எளிதில் கிடைக்க செய்யும் சேவையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்கோவா, மைசூர்பாக், பேடா, குலாப்ஜாமுன், ரசகுல்லா ஆகிய பால் பொருள்களின் தன்மை காலத்தினை அதிகரிக்க செய்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் பால் விற்பனையை 15 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக பால்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்று 1 லட்சம் லிட்டர் அதிகரித்திருப்பதாக பால்வளத்துறை குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.