சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்ன..? முக்கிய அறிவிப்புகள் வருமா..?

இன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலநிதிய திருத்த சட்டமுன்வடிவு, கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்ன..? முக்கிய அறிவிப்புகள் வருமா..?

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

அமைச்சர்கள் சாமிநாதன், காந்தி, மூர்த்தி ஆகியோர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். அப்போது, உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்க உள்ளனர். இதனிடையே, கொடைக்கானலில் உள்ள கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக, சட்டப்பேரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் செந்தில் குமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவார்.

2017-18ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக, நாகை மாலி அல்லது சின்னத்துரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவர். மேலும், தொழிலாளர் நலநிதிய திருத்த சட்டமுன்வடிவு, கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.