களை கட்டுது சட்டமன்ற நூற்றாண்டு விழா... அலங்கார பணிகள் தீவிரம்!

சட்டமன்ற நூற்றாண்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் அலங்கரிப்பு வேலைகள் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.

களை கட்டுது சட்டமன்ற நூற்றாண்டு விழா... அலங்கார பணிகள் தீவிரம்!

சட்டமன்ற நூற்றாண்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் அலங்கரிப்பு வேலைகள் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டப்பேரவையில் கருணாநிதி பட திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது . தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக நேற்றும் இன்றும் குடியரசுத் தலைவர் அலுவலக பாதுகாப்பு அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்..மேலும் தலைமை செயலகம் மற்றும் தலைமை செயலகச் சாலை முழுவதும் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது.மேலும் தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் நாளை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி அதற்கான கார் ஒத்திகையும் நடைபெற்றது. குறிப்பாக இந்த ஒத்திகையானது சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து தலைமை செயலகம் நடைபெற்றது.