நீலகிரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...

நீலகிரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...

நீலகிரி, கோவை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஐந்து சென்டிமீட்டர் மழையும்,  கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என அறிவித்துள்ளது.