2 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிக்கு வருவோம்...சிலிண்டர் விலையை குறைப்போம் ...கனிமொழி எம்.பி.!!

2 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிக்கு வருவோம், சிலிண்டர் விலையை குறைப்போம் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிக்கு வருவோம்...சிலிண்டர் விலையை குறைப்போம் ...கனிமொழி எம்.பி.!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

திமுக ஆட்சி மகளிருக்கான ஆட்சி, மகளிருக்கு முதலிடம் தரும் ஆட்சி, ஆகையால் தான் ஆட்சிக்கு வந்தவுடன் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தினை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் பெண்களுக்கு அரசு பணியில் 40 சதவீத இடதுக்கீடு அறிவித்து அதனை செயல்படுத்தி கொண்டு இருக்கும் அரசு என்றும், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, இலவசமாக செல்போன் வழங்குவோம் என்றார்கள் வழங்கவில்லை, இலவச வைஃபை வழங்கப்படும் என்றார்கள் வழங்கவில்லை, முதியோர்களுக்கு அரசு பஸ்சில் இலவசம் என்றார்கள் அதுவும் வழங்கவில்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரும் அந்த இடத்திற்கு நாம் வருவோம். அதை நிச்சயமாக செய்து தருவோம் என்றார்.