
இவ்விழாவில் பேசிய சசிகலா,கழகத்திற்காக, தொண்டர்களுக்காக, மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என்றும் இன்று கழகத்திற்கு பொன்விழா ஆண்டு. இன்று கழகம் ஆட்சி கட்டிலில் இருந்திருந்தால் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெருமையாக இருந்திருக்கும் என்றார்..
தொடர்ந்து பேசிய அவர், இப்போது சொல்கிறேன் கழகம் தான் நமது கோயில், ஆகையால் அவர்கள் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம் என்றார். மேலும் அம்மா வழி வந்த தொண்டர்கள் யாரையும் தவறாக பேச மாட்டார்கள், ஆதலால் நாம் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என கூறினார்.
மேலும் பேசிய அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மக்களின் பேராதரவோடு கழக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும்,என்றும் அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்
நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்.என்றும் அவர் சூளுரைத்தார்