சென்னை மக்களின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும்...அன்புமணி ராமதாஸ்.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 43சதவீத வாக்குகளை மட்டுமே பதிவு செய்த சென்னை மக்களின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும்...அன்புமணி ராமதாஸ்.!!

சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாமக சார்பில் 2022-23 நிதியாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது.

அறிக்கையினை பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஜ ஏ கே மூர்த்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமனி ராமதாஸ் கூறுகையில், 

எங்கள் போராட்டம் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் வெளியிட படுவது எங்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் தமிழகத்தில் 60% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளர்கள், ஆனால் அவர்களுக்கு வெறும் 13,000 கோடி நிதி ஒதுக்கீடு போதாது என்றார்.

ஆளும் கட்சியும் சரி, ஆண்ட கட்சியும் சரி நடந்து முடிந்த நகர்புற உள்ளாச்சி தேர்தலில் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், இது பணத்திற்கு கிடைத்த வெற்றி என கூறிய அவர், இனி வரும் தேர்தலில் கட்சி சின்னத்தை தவிர்த்து, அனைவருக்கும் சுயேட்சை சின்னம் கொடுத்தால் தான் மக்கள் மக்களுக்கு ஓட்டு போடுவார்கள், இல்லையேல் காசு கொடுத்து கட்சிக்கு ஓட்டு போட வைத்து விடுவார்கள் என கூறினார்.  

 மேலும் கூட்டணி குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு, ஒருமித்த கருத்துக்களை கூறும் யாராக இருந்தாலும், அவர்களோடு சேர்ந்து பயணிக்க நாங்கள் தயார் என தெரிவித்தார்.