
அதிமுக பொதுக்குழு- செயற்குழு கூட்டத்தின் ஒருபகுதியாக, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை மனுவை சி.வி. சண்முகம் கூட்டத்தில் வாசித்தார்.
அப்போது, அதிமுகவின் இரட்டைத் தலைமையை ரத்து செய்து விட்டு ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் ஏகோபித்த கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
இந்த கோரிக்கை மனுவில், திமுகவுக்கு எதிராக அதிமுக சார்பில் ஒரு வலுவான தலைமையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி 2 ஆயிரத்து 190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் கோரிக்கை மனுவை வாசித்தபோது அரங்கத்தில் இருந்த உறுப்பினர்கள் ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.