“ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீட் தேர்விற்கு எதிராக போராடுகிறோம்" - உதயநிதி ஸ்டாலின்

“ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீட் தேர்விற்கு எதிராக போராடுகிறோம்" -  உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீட் தேர்விற்கு எதிராக போராடி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை கே டி சி நகர் பகுதியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

நெல்லை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் திமுக சார்பாக இளைஞரணி செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தினார்.

இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள நிதிதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், இளைஞர் அணி தொண்டர்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்னர்.

அதனை தொடர்ந்து மேடையில் அமைச்சர் உதயநிதி கூறியதாவது:- 

“நான் அமைச்சரான பிறகு முதல் முறையாக நான் நெல்லை வந்திருகிறேன். இந்த பயணம் மறக்கமுடியாத பயணம். நெல்லை இளைஞர்களை நான் சேலத்திற்கு அழைக்கிறேன். நெல்லை தான் சேலம் மாநாட்டிற்கு வழிகாட்டியாக உள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு கலைஞர் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நெல்லையில் தான் ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராக பேராடியதற்காக கலைஞர் 62 நாள் தனிமை சிறையில் அடைக்கபட்டார். பொதுநலத்தோடு,  சுயநலம் பார்க்காமல் களத்தில் இறங்கி போராடவேண்டும்; அவர்கள் தான் செயல் வீரர்கள்.

மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடத்த கூடாது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சி மற்றும் பட்ட பெயர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநரின் ஆரியம் திராவிடம் பற்றிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர் கேட்டற்கு எதிர்கட்சி தலைவர் அதை பற்றி கேட்கவேண்டாம் என கூறுகிறார்கள்.

திமுக நாடகம் ஆடுகிறது என கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீட் தேர்வுக்குக்கு எதிராக போராடுகிறோம். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வரபட்டது.  நீட் தேர்வு திமுக பிரச்சனை இல்லை; மக்கள் பிரச்சனை; மாணவர்கள் பிரச்சனை. அரியலூர் அனிதா உட்பட 6 வருடத்தில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா இருக்கும் வரை நீட்தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை.

மோடி கருப்பு பணத்தை ஒழித்து 15 லட்சம் போடுவதாக கூறினார். ஆனால் 15 பைசா கூட போடவில்லை. ஆனால் அதானி குழுமம் தான் வளர்ச்சி அடைந்துகொண்டு இருக்கிறது. 7.5 லட்சம் கோடி எங்கே போச்சுனு தெரியவில்லை. தணிக்கை அறிக்கை கூறுகிறது. ரமணா படம் பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளிப்பது போன்று இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு காப்பீடு அட்டை வழங்கி இருக்கிறார்கள்,

இளைஞரணி மீது திமுக தலைவர் மிக பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனை காப்பாற்ற வேண்டும்,திமுகவில் உழைத்தால் நல்ல இடத்திற்கு வரலாம்”,  என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com