எங்களிடம் சொகுசு கார் எல்லாம் இல்லை, ஏன் நாங்கள் வசிப்பதே வாடகை வீட்டில் தான்..! மதன் மனைவி கிருத்திகா பேச்சு.! 

எங்களிடம் சொகுசு கார் எல்லாம் இல்லை, ஏன் நாங்கள் வசிப்பதே வாடகை வீட்டில் தான்..! மதன் மனைவி கிருத்திகா பேச்சு.! 

எங்களிடம் சொகுசுக் கார் எதுவும் இல்லை என்றும் நாங்கள் வாடகை வீட்டில் தான் வசிப்பதாகவும் கைது செய்யப்பட்ட மதனின் மனைவி கிருத்திகா கூறியுள்ளார். 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி அதில் ஆபாசமாகப் பேசியதாக யூடியூபர் பப்ஜி மதன் மேல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த மதன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது யூடியூப் பக்கத்தின் நிர்வாகியாக இருந்ததால் அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டார். இதில் கிருத்திகாவுக்கு ஜாமின் கிடைக்க, மதனின் ஜாமின் மறுக்கப்பட்டது. 

இந்நிலையில் பப்ஜி மதன் மனைவி கிருத்திகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "மதன் விளையாடியது சைனீஸ் வெர்ஷன் பப்ஜி இல்லை, கொரியன் வெர்ஷன் பப்ஜி. அந்த வெர்ஷன் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.

என் கணவரான மதன் மீது 150 - 200 புகார்கள் இருப்பதாக செய்திகள் பரவுகிறது. ஆனால் எங்கள் வழக்கறிஞர்கள் மூலம் ஆய்வு செய்ததில் 4 புகார்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்த சொகுசுக் கார்களையும் வைத்திருக்கவில்லை. மதன் ஆர்டி ஏ6 என்ற ஒரு கார் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

அனைவரும் சொல்வது போல சொகுசு பங்களாக்கள் எதுவும் எங்களிடம் இல்லை. நாங்கள் இதுவரை வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். அந்த வீட்டின் சாவிகள் கூட போலீசாரிடம்தான் உள்ளது. நான் 8 மாத குழந்தையை கையில் வைத்துள்ளேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது வரை 4 பேர் மட்டுமே என் கணவர் மீது புகார் அளித்துள்ளனர். புகார் அளித்த அந்த 4 பேரும் தான் தனது கணவர் மதனை தூண்டிவிட்டு சில வார்த்தைகளை பேச வைத்துள்ளனர். மற்றபடி பெரும்பாலான  ஆடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை. என் கணவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களை இதுவரை போலீசார் தரப்பிலிருந்து கொடுக்கவில்லை.

20 மணி நேரம் மதன் பணியாற்றியதன் மூலம் தான் வருமானம் ஈட்டினோம். வேறு எந்த வகையான வருமானமும் எங்களுக்கு இல்லை. மதனின் யூ-டியூப் சேனலில் இதுவரை நான் பேசியதில்லை. தனது வங்கிக் கணக்கு மட்டுமே யூ-டியூப் சேனலுடன் இணைக்கப்படுள்ளது. அந்த வீடியோவில் வந்த குரல் என்னுடையது அல்ல. முடிந்தால் என்னுடையது என்று நிரூபியுங்கள்" இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.