அமராவதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...
உடுமலை அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் விஷச்சாராயம் காய்ச்சுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஈபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம், கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதிவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிக்க : ”பிரதமா் மோடி பதவி விலக வேண்டும்” - ஈவிகேஎஸ் கண்டனம்!
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் சென்ற சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களை வழி அனுப்பி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, திமுக அரசு விஷச்சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை எடுப்பதால்தான் வெளியில் தெரிவதாகவும், ஆனால் அதிமுக ஆட்சியில் விஷச்சாராயம் காய்ச்சுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தொிவித்துள்ளாா்.
ஈரோட்டில் நகர்ப்புற நலவாழ்வு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை பிரதமரே ராஜினாமா செய்ய வேண்டும் என இளங்கோவன் கூறினார்.
இதையும் படிக்க : விழுப்புரத்தில் பரபரப்பு: இரு பிரிவினரிடையே மோதல்...கோயிலுக்கு சீல் வைத்து 144 தடை விதித்த அதிகாரிகள்!
தொடர்ந்து பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் சுட்டிக்காட்டியவர், சிவகுமாருக்கு தகுந்த பதிலை துரைமுருகன் தெரிவித்துள்ளதாகவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது எனவும் திட்டவட்டமாக தொிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி பகுதியிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயிலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
விழுப்புரத்தில் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைப்பெற்ற திருவிழாவின் போது குறிப்பிட்ட பிரிவினரை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என மற்றோரு தரப்பினர் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க : இன்று முதல் +1 விடைத்தாள் நகலை பதிவிறக்கம்...மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இதையடுத்து சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியுற்றதை தொடர்ந்து, கோயிலை பூட்டி சீல் வைக்கும்படி கோட்டாசியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் கோயிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.
தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி தலைமையில் அப்பகுதி முழுக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிராமம் முழுவதையும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கோலியனூர் கூட்ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதில் மாணவிகள் 94.99 சதவீதமும், மாணவர்கள் 84.86 சதவீதமும், மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையும் படிக்க : இனி 200 கி.மீ தூரத்திற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்...போக்குவரத்துத்துறை அதிரடி!
இந்நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அந்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் முதல் தேர்வர்கள் https://dge. tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அதன் பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு (https://dge. tn.gov.in//) இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 505 ரூபாயும், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டுமென்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
200 கிலோ மீட்டர் வரையிலான குறைந்த தொலைவு பேருந்து பயணங்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைத்தூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் முழுவதும் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதையும் படிக்க : பைபார்ஜாய்: இன்னும் 6 மணி நேரத்திற்குள் தீவிர புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
இந்நிலையில் முன்பதிவு சேவையை விரிவாக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள செய்திக் குறிப்பில், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி வழியாக முன்பதிவு செய்ய முடியும். இந்த சூழ்நிலையில், 200 கிலோ மீட்டா் தொலைவு வரையில் பயணிக்கும் பயணிகளுக்கும் முன்பதிவு திட்டம் விரிவாக்கப்படுகிறது.
அதன்படி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.