வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ...

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ...

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதனால் 71 அடி கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. 

வைகை அணைக்கு வரும் ஆயிரத்து 750 கனஅடி உபரி நீர், 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 900 கனஅடி நீர் பாசனத்திற்காக கால்வாயிலும், 69 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீர் தேவைக்காகவும், மீதமுள்ள 751 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு  3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30-வது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.